வியாழன், 27 ஆகஸ்ட், 2009

இனப் படுகொலைக்கு இந்த வீடியோ அத்தாட்சியாகும்.

கிளிநொச்சி நகரைக் கைப்பற்றியப் பிறகு தங்களிடம் அகப்பட்ட தமிழர்களை சிறிலங்க இராணுவத்தினர் நிர்வாணப்படுத்தி, கண்ணைக் கட்டி சுட்டுக் கொல்லும் வீடியோ காட்சிகளை சானல் 4 இணையத் தளம் வெளியிட்டுள்ளது.கடந்த ஜனவரி மாதம் இந்தப் படுகொலைகள் நடந்ததாக்க கூறி, இந்த வீடியோவை பத்திரிக்கையாளர்களுக்கு வெளியிட்ட ஜர்னலிஸ்ட் ஃபார் டெமாக்ரசி என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.இந்த வீடியோ காட்சியில் தமிழர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, கைகள் பின்னால் கட்டப்பட்டு, கண்கள் கட்டப்பட்ட நிலையில் கீழே உட்காரவைத்து (ஒரு தமிழரை தனது பூட்ஸ் காலால் தோளில் உதைத்து சிங்கள சிப்பாய் உட்கார வைக்கிறான்) பிறகு அவனுடைய தலையில் சுட்டு கொல்லும் காட்சிகள் இடம் உள்ளது.சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் தலையில் இருந்து உதிரம் வெளியேறி தரையை நனைக்கிறது. இப்படி சுட்டுக் கொல்லப்பட்டுக் கிடக்கும் 8 பேரின் உடல்கள் அந்த வீடியோவில் உள்ளது. தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க அரசு மேற்கொண்ட இனப் படுகொலைக்கு இந்த வீடியோ அத்தாட்சியாகும்.
/video/2009/aug/channel4_video.asx

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக